ஐக்கிய நாடுகளின் சுகாதாரத்துடன் தொடர்புடைய நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளையும் (SDG) விஸ்வ சுகாதார உள்ளடக்கத்தையும் அடைவதற்காக முதனிலை சுகாதார கவனிப்பு முறைமை அத்தியாவசியமானது என்பதை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இலங்கையின் சுகாதார அமைச்சும் மாகாண சபைகள் அமைச்சும் உள்ளூராட்சி நிறுவனமும் முதனிலை சுகாதார கவனிப்பை பலப்படுத்துவதற்கு 5 ஆண்டு கருத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. பொதுமக்களை மையமாகக் கொண்ட முதனிலை சுகாதார கவனிப்பு தரத்தையும் பயன்பாட்டையும் அதிகரிப்பது இந்த கருத்திட்டத்தின் அபிவிருத்தி நோக்கமாகும்.
முதனிலை மருத்துவ கவனிப்பு சேவைகளை மீள ஒழுங்கமைப்பதற்கான உள்நாட்டில் வளர்க்கப்பட்ட மாதிரி அத்தியாவசியமானதாகும். இது இலங்கையில் 'எமது முன்னேற்றத்தைப் பேணிப் பாதுகாத்து, எமது எதிர்காலத்தை உருவாக்குவதில் முதனிலை சுகாதார கவனிப்பை மீள் ஒழுங்குபடுத்துதல்' என்ற பதாகையின் கீழ் வருகின்றது. மேலும் இந்த நகர்வின் கருத்து சுகாதார அடைவுகளை மேலும் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அதனூடாக அதிகரிக்கும் சவால்களை எதிர்நோக்குவதற்கு, குறிப்பாக தொற்றா நோய்களின் சுமைக்கு உள்ளூர் சுகாதார கவனிப்பு முறைமையைத் தயாரித்தல் நீரிழிவு, மார்பு வலி, இதய நோய், மாரடைப்பு, சுவாசக்கழல் நிலைகள் மற்றும் புற்றுநோய் என்பவை இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.
இந்த அணுகுமுறைக்கு வலுவான சாட்சியங்களையும் PSSPயின் 3 தொனிப்பொருள் பகுதிகளையும் எடுத்துக்காட்டுவதும் உதவுகிறது :
- இலங்கையின் தேவையை ஈடு செய்வதற்கு முதனிலை சுகாதாரத்தை மீளமைத்தல்
- மக்களை மையப்படுத்திய சேவைகளுக்காக தகவல் முகாமைத்துவ முறைமைகளை மேம்படுத்துதல்
- பிரதான முறைமையை மேம்படுத்துவதன் ஊடாக சுகாதாரதுறையைப் பலப்படுத்துதல்
அனைத்தையும் உள்ளடக்கிய PHC முறைமையின் கேள்விப் பக்கம் மற்றும் வழங்கல் பக்கம் ஆகிய இரண்டையும் அணுகுவதை PSSP நோக்கமாகக் கொண்டுள்ளது :
- கேள்வி பக்கத்தில் சுகாதார - தேடல் நடத்தையை மாற்றுவதற்கு செயலூக்கமுள்ள நடவடிக்கைகள் மக்களைச் சென்றடைவதையும் வலுவான பிரஜைகள் பின்னூட்டல் பொறிமுறையையும் உள்ளடக்குகிறது.
- வழங்கல் பக்கத்தில் மக்களுடைய தேவைகளுக்கு பதிலளிப்பது மற்றும் அவர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவது என்பவற்றின் மூலம் PMCIஐ பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
இந்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் பின்வருவனவற்றைச் செய்ய இலங்கைக்கு அனுமதி கிடைக்கிறது :
- அணி முகாமைத்துவம் மற்றும் நோயாளர்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கல் ஆகியவற்றில் திறன்களுடன் முதனிலை சுகாதார கவனிப்பைக் கொண்டிருக்கிறது.
- வினைத்திறன் மிக்க வகையில் தொற்றா நோய்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துதல் மற்றும் முகாமைப்படுத்துதல்.
- தொற்றா நோய்கள் நிகழ்ச்சித்திட்டத்திற்காக பொதுமக்களை அடிப்படையாகக் கொண்ட தகவல் முகாமைத்துவ முறைமையை ஸ்தாபித்தல்.
சீர்திருத்தத்திற்கான முக்கிய பிரதேசங்கள்
செயற்பாட்டு பிரதேசம் 1
முதனிலை சுகாதார கவனிப்பை மீள ஒழுங்கமைத்தல் மற்றும் கொள்கைகளையும் தரங்களையும் வரைவிலக்கணப்படுத்துதல்.
- PHC யை மீள ஒழுங்கமைப்பதற்காக ஒட்டுமொத்த மூலோபாய கவனிப்பை வழங்குதல்
- விரிவான கொள்கைகள், தரங்கள் மற்றும் அமுலாக்கல் வழிகாட்டல்களை வழங்குதல்
செயற்பாட்டு பிரதேசம் 2
முறைமை மேம்படுத்தல்கள் - பலப்படுத்துதல் செயற்பாடுகளையும் ஆக்கத் திறன்களையும் அளித்தல்
- தரமான சேவை தொகுதிகளை வழங்குவதற்காக தேவையான PMCI ஆக்கத் திறனை ஸ்தாபித்தல்.
இவற்றில் பின்வருவன உள்ளடங்குகின்றன :
- குறைந்த எண்ணிக்கையில் பயிற்சிபெற்ற பணியாட் தொகுதியினரைக் கொண்டிருத்தல்
- ஆகக் குறைந்த அத்தியாவசிய ஒளஷதங்கள் மற்றும் ஆய்வுகூட கொள்ளளவு என்பவற்றைக் கொண்டிருத்தல்
- ஆகக் குறைந்த செயற்படும் நோயறியும் கருவிகளைக் கொண்டிருத்தல்
- உதவும் மேற்பார்வை பொறிமுறையை ஸ்தாபித்தல்
- கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிக நோயாளர் நேசம் கொண்ட சேவைகளுக்கு உதவும் ஏற்பாடுகள் :
- ஒரு மாத வழங்கல் தொகுதி ஊடாக தொற்றா நோய்களுக்கான ஒளஷதங்கள் ஏற்பாடு
- PMCI யில் ஆய்வுகூட வலையமைப்பை ஸ்தாபித்தல்
- அரசாங்கத்தினால் நிதியுதவி அளிக்கப்படுகின்ற ஒளஷதங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளுவதற்கு மருந்தகங்களிலிருந்து மருந்து சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள நோயாளர்களுக்கு அனுமதியளித்தல்
- PMCI யில் மருத்துவர்களை சந்திப்பதற்கு ஒதுக்கீடு செய்யும் முறைமையை ஸ்தாபித்தல்
- இயலுமான நேரத்தில் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு தனியார் துறையுடன் இணைந்து (தொற்றா நோய்களை திரையில் காட்டுதல்) நோயாளர் தோழமை கொண்ட சேவைகளை ஊக்குவிப்பதன் ஊடாக அரச - தனியார் துறை பங்காண்மை சூழலை சாத்தியமாக்கிக்கொள்ளுதல்.
- தொற்றா நோய் கவனிப்பு சேவைகளைப் பயன்படுத்துவதில் பால்நிலை வேறுபாடுகளைப்பற்றி கதைப்பதற்கு செயற்பாடுகளைப் பெறும் சேவைகளையும் செயற்பாட்டு வைத்தியர் ஒதுக்கங்களைப் பnறும் சேவைகளையும் ஸ்தாபித்தல்.
செயற்பாட்டு பிரதேசம் 3
உதவும் முறைமையை சரியான நேரத்தில் அபிவிருத்தி செய்யும் விடயத்தில் மேம்படுத்துவதற்கான தகவல் முகாமைததுவம்.
- இணைப்பாக்கம் செய்யப்பட்ட நோயாளர் கவனிப்புக்கு வசதிப்படுத்துவதற்கு தனிப்பட்ட சுகாதார பதிவேடுகள் முறைமையை விருத்திசெய்தல்
- குறித்த நேரத்தில் வினைத்திறன்மிக்க ஒளஷத விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய விலைமனு கோரல் மற்றும் விநியோக தொடர்செயல் முயைமையை மேம்படுத்துதல்
செயற்பாட்டு பிரதேசம் 4
சனத் தொகை கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும் உரிய நேரத்தில் வலுவூட்டுவதற்கும் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்குமான தகவல் முகாமைத்துவம்.
- சுகாதார துறையில் பொதுமக்கள் ஈடுபடும் பொறிமுறையையும் வகைப்பொறுப்பையும் விருத்திசெய்தல்
- PHC முறைமையில் மாற்றங்களை பொதுமக்களுக்கும் பங்கீடுபாட்டாளர்களுக்கும் அறிவிப்பதற்கு ஒரு தொடர்பாடல் மூலோபாயத்தை அமுலாக்கல்.
- சுகாதார சேவையில் பொதுமக்களின் பின்னூட்டலுக்கு பதிலளிப்பதற்கு மனக்கவலையைதை தணிக்கும் பொறிமுறையை (GRM) ஸ்தாபித்தல்.
- 'வசதியின் நண்பர்கள்' குழுவின் ஊடாக சேவைசெய்கின்ற PMCI மற்றும் சமூகங்கள் ன்பவற்றிற்கிடையில் நேரடி தொடர்பை ஏற்படுத்துதல்.
செயற்பாட்டு பிரதேசம் 5
தொற்றா நோய்களின் கண்டுபிடிப்பு மற்றும் முகாமைத்துவம் என்பவற்றைப் பற்றி வலியுறுத்துவதற்கு PMCI யின் பயன்பாட்டையும் தரத்தையம் அதிகரித்தல்
- உயர் இடர் குழுக்களில் தொற்றா நோய்களை குறிப்பாக தடுக்கும்/ முகாமைப்படுத்தும் PHC சேவைகளின் பயன்பாட்டை அதிகரித்தல்
- தொற்றா நோய்களை எடுத்துக்காட்டுவதை அதிகரித்தல்
- தொற்றா நோய்களை எடுத்துக்காட்டுதல் மற்றும் முகாமைப்படுத்துதல் என்பவற்றிற்கான பயன்பாட்டு நேசம் கொண்ட உபசரணைகளையும் வழிகாட்டல்களையும் விருத்திசெய்தல்