ஐக்கிய நாடுகளின் சுகாதாரத்துடன் தொடர்புடைய நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளையும் (SDG) விஸ்வ சுகாதார உள்ளடக்கத்தையும் அடைவதற்காக முதனிலை சுகாதார கவனிப்பு முறைமை அத்தியாவசியமானது என்பதை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இலங்கையின் சுகாதார அமைச்சும் மாகாண சபைகள் அமைச்சும் உள்ளூராட்சி நிறுவனமும் முதனிலை சுகாதார கவனிப்பை பலப்படுத்துவதற்கு 5 ஆண்டு கருத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. பொதுமக்களை மையமாகக் கொண்ட முதனிலை சுகாதார கவனிப்பு தரத்தையும் பயன்பாட்டையும் அதிகரிப்பது இந்த கருத்திட்டத்தின் அபிவிருத்தி நோக்கமாகும்.

முதனிலை மருத்துவ கவனிப்பு சேவைகளை மீள ஒழுங்கமைப்பதற்கான உள்நாட்டில் வளர்க்கப்பட்ட மாதிரி அத்தியாவசியமானதாகும். இது இலங்கையில் 'எமது முன்னேற்றத்தைப் பேணிப் பாதுகாத்து, எமது எதிர்காலத்தை உருவாக்குவதில் முதனிலை சுகாதார கவனிப்பை மீள் ஒழுங்குபடுத்துதல்' என்ற பதாகையின் கீழ் வருகின்றது. மேலும் இந்த நகர்வின் கருத்து சுகாதார அடைவுகளை மேலும் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அதனூடாக அதிகரிக்கும் சவால்களை எதிர்நோக்குவதற்கு, குறிப்பாக தொற்றா நோய்களின் சுமைக்கு உள்ளூர் சுகாதார கவனிப்பு முறைமையைத் தயாரித்தல் நீரிழிவு, மார்பு வலி, இதய நோய், மாரடைப்பு, சுவாசக்கழல் நிலைகள் மற்றும் புற்றுநோய் என்பவை இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

இந்த அணுகுமுறைக்கு வலுவான சாட்சியங்களையும் PSSPயின் 3 தொனிப்பொருள் பகுதிகளையும் எடுத்துக்காட்டுவதும் உதவுகிறது :

  • இலங்கையின் தேவையை ஈடு செய்வதற்கு முதனிலை சுகாதாரத்தை மீளமைத்தல்
  • மக்களை மையப்படுத்திய சேவைகளுக்காக தகவல் முகாமைத்துவ முறைமைகளை மேம்படுத்துதல்
  • பிரதான முறைமையை மேம்படுத்துவதன் ஊடாக சுகாதாரதுறையைப் பலப்படுத்துதல்

அனைத்தையும் உள்ளடக்கிய PHC முறைமையின் கேள்விப் பக்கம் மற்றும் வழங்கல் பக்கம் ஆகிய இரண்டையும் அணுகுவதை PSSP நோக்கமாகக் கொண்டுள்ளது :

  • கேள்வி பக்கத்தில் சுகாதார - தேடல் நடத்தையை மாற்றுவதற்கு செயலூக்கமுள்ள நடவடிக்கைகள் மக்களைச் சென்றடைவதையும் வலுவான பிரஜைகள் பின்னூட்டல் பொறிமுறையையும் உள்ளடக்குகிறது.
  • வழங்கல் பக்கத்தில் மக்களுடைய தேவைகளுக்கு பதிலளிப்பது மற்றும் அவர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவது என்பவற்றின் மூலம் PMCIஐ பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.

இந்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் பின்வருவனவற்றைச் செய்ய இலங்கைக்கு அனுமதி கிடைக்கிறது :

  • அணி முகாமைத்துவம் மற்றும் நோயாளர்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கல் ஆகியவற்றில் திறன்களுடன் முதனிலை சுகாதார கவனிப்பைக் கொண்டிருக்கிறது.
  • வினைத்திறன் மிக்க வகையில் தொற்றா நோய்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துதல் மற்றும் முகாமைப்படுத்துதல்.
  • தொற்றா நோய்கள் நிகழ்ச்சித்திட்டத்திற்காக பொதுமக்களை அடிப்படையாகக் கொண்ட தகவல் முகாமைத்துவ முறைமையை ஸ்தாபித்தல்.

சீர்திருத்தத்திற்கான முக்கிய பிரதேசங்கள்